Saturday, June 3, 2017

Rules & Regulations of AL-AMEEN

 தினந்தோறும் காலைவேளையில் வழிபாட்டு கூட்டம் நடைபெறும் அதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களிடம் பணிவுடனும், மரியாதையாகவும் நடத்தல் வேண்டும் இல்லையெனில் மாணவர் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படநேரிடும்.

மாணவர்கள் பள்ளிவேளை முடியும்முன் பள்ளியைவிட்டு வெளியேற அனுமதியில்லை.

பள்ளிவாகனத்தில் அமைதிகாத்து வருதல் வேண்டும்.

பள்ளி வாகனத்தில் விளையாடும் குழந்தைகள் ஆசிரியைகளால் கண்டிக்கப்படக்கூடும். சில நேரம் தண்டிக்கப்படவும் நேரிடலாம்.

பிற மாணவர்களுடைய பொருட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த அனுமதி இல்லை.

விடுமுறை எடுக்க வேண்டுமெனில் வகுப்பு ஆசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

உரிய நேரத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்திட வேண்டும்.

தேர்வுகாலத்தில் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது.

அவ்வப்போது நடைபெறும் நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கணடிப்பாக அனைத்து பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டும்.